துபாய், அமெரிக்காவில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு இந்தியாவில் இல்லை… நடிகை கீர்த்தி சுரேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  நடிகை திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்த நிலையில் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக தேசிய விருதும் கிடைத்தது.

தொடர்ந்து மாமன்னன், சைரன் என சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட காலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் விளம்பரப் பணிகளின் போது சென்னையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாதுகாப்பு இங்கு இல்லை என்றும், துபாயில் பெண்களுக்கான சட்டம் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தியாவிலும் அதுபோல் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.