தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தென் தமிழக மற்றும் காவிரி படுகையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை தொடர்கிறது. நாளை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கனமழை இடைவிடாமல் பெய்தால் பள்ளிகளுக்கும் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
