இபிஸ்-க்கு அடுத்த சிக்கல்… பாஜக போடும் பிரஷர்… கூட்டணியில் புதிய விரிசல்… செம அப்செட்டில் எடப்பாடி…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும் கட்சியை மேலும் பலப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி அதிமுக கூட்டணியில இடம் பெற்றுள்ள பாஜக இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகித்தது. அந்த தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணியில் இருந்த பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20, இதர கட்சிகளுக்கு 6 என்ற விகிதத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. இதில் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது.

அதிமுக மட்டும் 66 இடங்களிலும், பாமக ஐந்து இடங்களிலும், பாஜக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் பாமக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிப்பை இன்னும் வெளியிடாமல் உள்ளன. இந்நிலையில் 81 தொகுதிகளில் இருந்து வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பாஜக தேர்வு செய்து வைத்துள்ளது. இதில் இருந்து 45 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

அதேசமயம் அதிமுக தரப்பு கடந்த முறை ஒதுக்கிய 20 இடங்களை மட்டும் தான் தர முடியும் என்று சொல்லி வருகிறது. தொடர்ந்து பாஜக கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக 24 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. ஆனால் 45 இடங்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனிடையே கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிக வந்தால் அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தற்போது பாஜகவிடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது