பழைய வாகனங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு… இனி ரூ.15,000… வெளியான திடீர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பொதுமக்கள் பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் வயதை பொறுத்து தகுதி சான்றிதழ் கட்டணம் வசூல் செய்யப்படும். 10 – 15, 15 முதல் 20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் என மூன்று பிரிவுகளாக வாகனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி தற்போது லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 25000 ரூபாயாகவும், நடுத்தர வாகனங்களுக்கான கட்டணம் 1800 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், கார் போன்ற வாகனங்களுக்கான கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், பைக்குகளுக்கு 600 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பழைய வாகனங்களை வாங்குவோர் யோசித்து வாங்குவது நல்லது.