அம்மாடியோ… நூடுல்ஸ் போல சுருட்டி மலைப்பாம்பை விழுங்கிய ராஜநாகம்… காண்போரை பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் அதில் சில வீடியோக்கள் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாக்கியுள்ளது. உலகிலேயே மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றுதான் ராஜ நாகம். இது தன்னைவிட பெரிய மலைப்பாம்பை கொடூரமாக வேட்டையாடி விழுங்கக்கூடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நூடுல்ஸ் போல சுருட்டி படிப்படியாக முழுமையாக விழுங்கக்கூடிய இந்த காட்சியை பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே ராஜனாக முன்னாக் கூடிய உணவுகளில் 75% வரை பிற பாம்புகள் தான். விஷம் உள்ள நாகங்கள், சிறிய மலைப்பாம்புகள் என பல பாம்புகளை இரையாகக் கொண்டதுதான் ராஜ நாகத்தின் தனி சிறப்பு. மலைப்பாம்பை விழுங்கக்கூடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இவ்வளவு பெரிய இரையை செரிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Jay Brewer பதிவைப் பகிர்ந்துள்ளார் (@jayprehistoricpets)