மதிமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் தான் மல்லை சத்யா. இவர் அந்த கட்சியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். வைகோவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததால் இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் திராவிட இயக்க தலைவர்கள் கட்சி பெயர் பலகை மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தனர். ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் (TVK), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) என இரு கட்சிகள் உள்ள நிலையில் தற்போது திராவிட வெற்றி கழகம் (DVK) என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
