தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து அதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் 7,34,000 விவசாயிகள் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்துள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால் காப்பீடு செய்யாத விவசாயிகள் விரைந்து பயன்பெற வேண்டும். வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளை அணுகி காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனே சென்று வேலையை முடித்து விடுவது நல்லது.
