தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் எண்ணத்தில் திமுக செயல்பட்டு வர கூட்டணியையும் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. அதேசமயம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் திமுகவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சமீப காலமாகவே மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் திமுகவிற்கு பலம் கூடிக் கொண்டே போகிறது.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் அதிமுக மற்றும் அமமுகவிலிருந்து விலகி 70-க்கும் மேற்பட்டோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக ஓபிஎஸ் அணியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எஸ் கதிரவன், நெல்லையில் பிரபல தொழிலதிபரான RS முருகன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். தனது பலத்தை நிரூபிக்க தென் மாவட்டங்களில் விரைவில் மாபெரும் இணைப்பு விழாவை நடத்த மனோஜ் பாண்டியன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.
