நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் கடைசி வாரம் வரை நடைபெற இருந்த குரூப் D பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக RRB முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட தேர்வுகள் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெறும். நாளை முதல் இதற்கான இடம் மற்றும் தேதி விவரங்களை இணையதளத்தில் அறியலாம். தேர்வுக்கு நான்கு நாட்கள் முன்பாகவே e – call letters ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். மொத்தம் 32,438 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
