காலையிலேயே குட் நியூஸ்… ரூ.1.50 கோடி வரை மானியம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 19, 2025

Spread the love

தமிழகத்தில் 100 மதிப்பு கூட்டு மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்களுக்கு சுமார் 1.50 கோடி வரை மானியம் கிடைக்கும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற்ற பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொழில் முனைவோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.