காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்… ஆட்சி அதிகாரத்தில் பங்கு… திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on கார்த்திகை 19, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதால் ஸ்டாலினுக்கு அது பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வெளிப்படையாகவே கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட இருப்பதாகவும் சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுகவிடம் வைக்கவில்லை என்று அவர் இப்போது கூறியுள்ளார். அதே சமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.