உலகின் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் (X), தளமானது இந்தியாவில் இன்று (நவ.18) மாலை திடீரென்று முடங்கியது. மாலை 5.15 மணி முதல் இந்த சிக்கல் நீடித்து வருவதனால் பயனாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழையவோ, வெளியேறவோ அல்லது பதிவுகளை பார்க்கவோ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் இந்த சேவை முடக்கம் குறித்து எக்ஸ் (X) நிறுவனம் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
