ரேஷன் கடைகளில் இலவசமான சேனிட்டரி நாப்கின்…? உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love
தமிழக ரேஷன் கடைகளில், சானிட்டரி நேப்கின்களை மானிய விலையிலோ அல்லது  இலவசமாகவோ வழங்கக் கோரிய வழக்கில், டிசம்பர் 16 ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், சுகாதாரத் துறை உள்ளிட்ட மூன்று துறையை சேர்ந்த செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிலளிக்காவிட்டால் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இது தொடர்பாக தாம்பரத்தை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.