திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதியன்று மலையில் மகாதீபம் ஏற்றப்படும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். லட்சக்கணக்கானோர் கூடும் இந்த திருவிழாவிற்கு நெரிசல் இல்லாமல் செல்ல, 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
