இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்… அதிமுக கூட்டணியில் 50+தொகுதிகளை கேட்கும் பாஜக?… சீக்ரெட்டை உடைத்த பிரபலம்…!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இ பி எஸ் இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறார். அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே அதிமுக கூட்டணியில் இணைய சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் தற்போது கூட்டணியில் இருக்கும் பாஜகவும் கூடுதல் தொகுதிகளை கேட்பதாக ஒரு செய்தி உலா வந்தது.

இந்நிலையில் கூட்டணியில் இன்னும் எத்தனை கட்சிகள் வரப்போகின்றன என்பதை பொறுத்துதான் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முடிவு செய்யப்படும் என நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். இத்தனை தொகுதிகளை பாஜக எதிர் பார்க்கிறது என சொல்வது தவறு என்ற அவர், தேர்தல் காலம் வரும் போது தான் அதை முடிவு செய்ய முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் தொகுதி பங்கிட்டை அதிமுக மற்றும் பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.