வறுமையால் வாடிய குடும்பம்…! சிங்கப்பூருக்கு சென்ற விவசாய தம்பதியின் மகன்…! யாரும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2025

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியின் மகன் செந்தூரன் (25). தொழிற்கல்வி பட்டயப் படிப்பை முடித்த இவர், குடும்பத்தின் வறுமையைப் போக்கிப் பிழைப்புக்காக ஐந்து மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்குச் சென்று, அங்கு ஒரு கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று  மாலை சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. எதிர்பாராத விதமாக செந்தூரன் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

மின்னல் தாக்கி செந்தூரன் சுருண்டு விழுந்ததைக் கண்ட சக தொழிலாளர்கள், உடனடியாக மருத்துவமனைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், தனியார் நிறுவன ஊழியர்கள் செந்தூரனின் பெற்றோருக்குத் தொலைபேசி மூலம் இந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்தனர். பிழைப்புக்காகச் சென்ற மகன், மின்னல் தாக்கி இறந்த செய்தி கேட்டு குடும்பமும் கிராமமும் சோகத்தில் ஆழ்ந்தது.

   

உழைத்துச் சம்பாதிக்கச் சென்ற இடத்தில் உயிரிழந்த செந்தூரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.