உதகை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹில்பங்க் பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படுவது வழக்கம். இந்த பகுதியில் உள்ள தமிழகம் மாளிகை செல்லும் சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நொடியில் பெட்ரோல் பங்குக்குள் தாறுமாறாக ஓடி இரும்பு தடுப்புகளை இடித்து ரோகினி நெடுஞ்சாலைக்கு பறந்து சென்ற தலைகுப்பிற கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தலைகீழாக கவிழ்ந்த காரில் சிக்கிய உரிமையாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் சாலையில் பரபரப்பு நிலவியது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் கிடந்த வாகனத்தை அப்புறப்படுத்தி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சினிமா பட வானில் பறந்து சென்ற விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகையில் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்தரத்தில் பறந்து விபத்து #Ooty #CarAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/8aXD7f2wK1
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 16, 2025
