RAIN ALERT: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொளந்து கட்டும் கனமழை… வந்தது அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.