மதுரையில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர் தர்மராஜின் ஐந்தாவது மகள் திவ்யா எம்எஸ்சி படித்து வந்துள்ளார். மலேசியாவில் மேல்படிப்பு தொடரப் போவதாக கூறி வீட்டில் அனைத்து ஆவணங்களையும் காட்டியதால் குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அதேசமயம் படிப்புக்கு தேவையான ஐந்து லட்சம் ரூபாய் உள்ளிட்ட செலவுகளையும் பெற்றுக் கொண்ட திவ்யா மூன்று வருடங்களாக மலேசியாவில் இருப்பதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர். ஆனால் சமீபத்தில் பிரகாஷ் என்ற இளைஞர் திவ்யாவை வைத்து போனில் பேசும்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்தார்.
அதாவது திவ்யாவும் அவரும் மறைமுகமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார். பிரகாஷ் உடன் ஏற்பட்ட கலகலப்புகள் காரணமாக திவ்யா பெற்றோரிடம் உண்மையை சொல்லவும் முடியாமல் தவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்ததாகவும் பிறகு மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பிரகாஷ் தெரிவித்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் ஒரு குடும்பத்தின் கனவுகளையும் வாழ்க்கையையும் முற்றிலும் சிதைத்துள்ளது. தற்போது இரண்டு வயது குழந்தை பரிதவித்து நிற்கிறது. மலேசியா கல்வி என்ற பெயரில் நடந்த இந்த ஏமாற்று நாடகம் ஒரு குடும்பத்தில் மறக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
