கன்னியாகுமரி மாவட்டம், செறியகொல்லை பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சுரேஷ் என்பவரது 17 வயது மகள், பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்துள்ளது. மைனர் பெண் குழந்தை பெற்றதால், விபரம் அறிந்த காவல்துறையினர் வந்து விசாரித்தனர். அப்போது, சிறுமியின் தந்தை சுரேஷ், குழந்தையை கேரள மாநிலத் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்திருந்தது தெரியவந்தது.
முதலில் தனது கர்ப்பத்திற்குக் காதலன்தான் காரணம் என்று சிறுமி தெரிவித்தாலும், தொடர் விசாரணையில் அவர் அதிர்ச்சி தகவலை கூறினார். வீட்டில் தாய் மற்றும் சகோதரன் இல்லாத நேரங்களில், தனது தந்தை சுரேஷ் வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாலேயே தான் கர்ப்பமானதாக அந்தச் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, தன் மகளுக்கே இந்தக் கொடூரத்தைச் செய்த தந்தையை, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
