அடேங்கப்பா…! 1000 கிலோ எடை…! மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை மீன்… என்ன இது…?

By Devi Ramu on கார்த்திகை 16, 2025

Spread the love

பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களின் வலையில், ஓர் அரிய வகைச் சூரிய மீன் சிக்கியது. சுமார் 15 கிலோ எடையும், 3  அடி நீளமும் உயரமும் கொண்ட இந்த மீனின் வால் துடுப்புப் பகுதி உருமாறிய நிலையில் காணப்பட்டது. இந்த விநோத தோற்றத்தைக் காண பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் கூடினர்.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இது சூரிய மீன் எனப்படும் இனத்தைச் சேர்ந்தது என்றும், இது அதிகபட்சமாக 3 மீட்டர் நீளம் வரையிலும், 1,000 கிலோ எடை வரையிலும் வளரக்கூடியது என்றும் கூறினர். அமைதியான இந்த மீன், சிப்பி, நண்டு, இறால் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது.

   

பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உட்பட பல்வேறு கடல்களில் காணப்படும் இந்த இனம், மன்னார் வளைகுடா பகுதியில் மிகவும் அரிதாகவே  தென்படுகிறது. மேலும், இந்த வகை மீனை மக்கள் பொதுவாக உணவுக்காக விரும்புவதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.