செம மாஸ், “தலைவன் இறங்கட்டுமே”… சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு CSK வெளியிட்ட வீடியோ… செம குஷியில் ரசிகர்கள்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக டிசம்பர் 16ஆம் தேதி மினி ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தக்க வைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் நேற்றை வெளியிட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியை நான்கு கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன் மூலமாக 2026 ஐபிஎல் தொடரில் ஜோடி விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதாவது கூலி படத்தின் கூலி பவர் ஹவுஸ் பாடலை பயன்படுத்தி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் தல தோனிக்கு இந்த வீடியோவை சிஎஸ்கே அணி எடிட் செய்து வெளியிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.