காலையிலேயே மீண்டும் அதிர்ச்சி..! நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்… பெரும் பதற்றம்..!!

By Soundarya on கார்த்திகை 16, 2025

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் பிடித்துள்ளனர். மின்னஞ்சல் மூலமாக ஏற்கனவே நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர்  நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த பெண் ராதா (34) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரை பிடித்த காவல்துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.