தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் பல வியூகங்களை கையில் எடுத்து வருகிறது. அதே சமயம் திமுகவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றது.
திமுகவின் கூட்டணி கட்சிகளில் முதலிடத்தில் இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். அப்படி இருக்கும் போது அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என விசிகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்த திருமாவளவன் வேறு கட்சியில் இணைய போகிறார் என்ற தகவலும் பரவியது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக திருமாவளவன் திமுகவிற்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதனை நிறைவேற்றி தர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இந்த மாதிரியான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கூறுவது வழக்கம்தான். ஆனால் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சியே இந்த முழக்கத்தை முன் வைப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுகவை எதிர்க்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராகிவிட்டது என்ற கருத்தும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
