நகைக்கடன் விதிகளில் புதிய ரூல்ஸ்… இனி 7 நாட்களுக்குள்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

பொதுவாகவே நாம் அவசர தேவை என்றால் நம்மிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். நாம் அடகு வைக்கக்கூடிய நகைக்கி பொருத்தவாறு வங்கிகளில் இருந்து நமக்கு கடன் வழங்கப்படும். அதற்கு வட்டி செலுத்தி வரும் பட்சத்தில் வருடத்திற்கு ஒருமுறை அதனை மீண்டும் திருப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அப்படி முயலாவிட்டால் நகைகள் ஏலத்தில் விடப்படும். தற்போது நகைக்கடன் விதிகளில் தொடர்ந்து பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அதன்படி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறை 2026 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகின்றது. கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் நகைகளை வங்கிகள் ஏலம் விடலாம். ஆனால் ஏலத்தின் விவரங்களை தாய்மொழியில் உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஏலம் நடந்தால் உபரித்தொகை ஏழு நாட்களுக்குள் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கடனை முறையாக செலுத்தி விட்டால் நகைகளை 7 நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.