பாமகவில் அடுத்த பரபரப்பு… இனி எல்லாமே நான்தான்… அன்புமணி பேச்சால் ஆடிப் போய் நிற்கும் ராமதாஸ்…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தை மகன் நடுவில் நிலவும் பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்கிறது. இதனால் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தெரிவித்துவிட்டது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று ராமதாஸ் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் உண்மையான பாமக யார் என்பதே தற்போது கேள்விக்குறியாக தான் உள்ளது. அதேசமயம் பாமக இரண்டாக இருப்பதால் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. இப்படியான நிலையில் அன்புமணி பேசிய பேச்சு ராமதாசுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

அன்புமணி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தபோது பேசி அன்புமணி, என்னை கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. சின்னத்தை எனக்கு ஒதுக்கி விட்டார்கள். யாராலும் எதுவும் செய்ய முடியாது. இதை காரணமாக வைத்து நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நடைபெறாது. அதனால் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்து பாமகவில் எல்லாமே நான்தான் என்பதை உறுதிப்படுத்தி உள்ளதால் ராமதாஸ் ஆதரவாளர்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். தற்போது புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.