பழம்பெரும் பாலிவுட் நடிகையான காமினி கௌசல்(98) காலமானார். 1946 ஆம் வருடம் NEECHA NAGAR என்ற படத்தின் மூலம் திரையுலகில் இவர் அறிமுகமானார். இந்தியாவில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே கான் பட விழாவில் Palme d’Or என்ற விருது வென்றுள்ளது. நடிகர் திலீப் குமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை காமினி, கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
