சென்னை சவுகார்பேட்டையில் வீரப்பன் தெருவில் வசித்து வருபவர் ஜெய்ஷ் ஜெயின். 29 வயதான இவர் அதே முகவரியில் தங்க நகை மொத்த விற்பனை கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் ஜெயின் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்க நகைகள் இருப்புகளை சரிபார்த்த போது 1200 கிராம் தங்க நகைகள் குறைவாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட நகை கடைக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்கள்.
அப்போது அதே கடையில் பணிபுரிந்து வந்த தெலுங்கானா ,ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகைகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி உள்ளார்கள். அப்போது இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டி கடந்த ஒரு வருடத்திற்கு மேல் கடையிலிருந்து சிறு சிறுக தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது .மேலும் அந்த பணத்தில் ஆடம்பரமாக செலவழித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள்.
