நாயகன் படம் உருவானது இப்படிதான்….! “அதிலும் சரண்யாவின் கதாபாத்திரம்…” கமலை டாமினேட் செய்த பெரிய நடிகர்…. பிரபலம் பகிர்ந்த தகவல்…!!

By Devi Ramu on கார்த்திகை 14, 2025

Spread the love

இயக்குநர் மணிரத்னத்தின் ‘நாயகன்’ (1987) திரைப்படம் குறித்து முக்தா பிலிம்ஸ் முக்தா ரவி  பேசியுள்ளார். இந்தப் படத்தை மறு வெளியீடு செய்யும் யோசனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாம். ஆனால், அந்த நேரத்தில் படத்தின் நெகட்டிவ் ஃபிலிம்கள் சில காட்சிகளில் சேதமடைந்ததால், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து டிஜிட்டல் ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டிய சிரமம் ஏற்பட்டது.

‘நாயகன்’ உருவான கதை சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில், முக்தா ரவியின் சகோதரர் முக்தா சுந்தர், பிரபல ஆங்கிலப் படமான ‘காட் ஃபாதரை’ தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். அதற்காக சிவாஜி கணேசன், கமல்ஹாசன் மற்றும் அமலா ஆகியோரை நடிக்க வைத்து விளம்பரம் செய்து, சிவாஜிக்கும் அமலாவுக்கும் முன்பணமும் கொடுக்கப்பட்டது.

   

ஆனால், சிவாஜியின் ஆதிக்கம் கமலின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று முக்தா ரவியின் தந்தை கருதியதால், கதையில் மாற்றங்கள் தேடப்பட்டது. வேறு கதைகள் கமலுக்குப் பிடிக்காத நிலையில், மணிரத்னம் ‘வரதராஜ முதலியார்’ பற்றிய கதையைச் சொன்னார். அந்தக் கதையின் நேர்த்தி பிடித்துப்போனதால், முதலில் இயக்குவதாக இருந்த முக்தா சுந்தர், மணிரத்னத்தையே இயக்கச் சொல்லிவிட்டாராம்.

   

படத்தில் சரண்யாவின் கதாபாத்திரம், விபச்சாரி ஒருத்தி படித்து ஐஏஎஸ் அதிகாரி ஆவது பற்றி சரத் சந்திர சட்டர்ஜி எழுதிய 1960-ன் நாவலில் இருந்து எடுக்கப்பட்டதாக, முக்தா ரவியின் தந்தை மணிரத்னத்திடம் கூறியதால் பயன்படுத்தப்பட்டது. முதலில் ‘கதாநாயகன்’ என்று பெயரிடப்பட்ட படம், தலைப்பு சிக்கலால் ‘நாயகன்’ என மாற்றப்பட்டது.

 

படத்தின் தயாரிப்புச் செலவுகளுக்காக, இப்போதைய பாஜக அலுவலகமாகச் செயல்படும் கமலாலயம் என்ற தங்கள் வீட்டையே அடமானம் வைத்து படம் எடுக்கப்பட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். இந்தத் தரம் உயர்த்தப்பட்ட மறு வெளியீட்டிற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.