திடீர் திருப்பம்… 2026 தேர்தலில் முக்கிய தொகுதியில் களமிறங்கும் சென்னை மேயர் பிரியா… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. எப்படியாவது மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் இறங்கியுள்ளார். ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் சமயம் பார்த்து ஸ்டாலின் இடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என பல நிபந்தனைகளை விதித்து வருகின்றன. இதனிடையே விஜயின் அரசியல் வருகையிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் திமுகவுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது.

இருந்தாலும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் வருகை மற்றும் சீமானின் வாக்கு சதவீதம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்னை, கோவை போன்ற நகரங்களில் இளம் வேட்பாளர்களை களம் இறக்க வேண்டும் என்ற கருத்து திமுகவுக்குள் வலுவாக இருக்கிறதாம். இந்த சூழலில் சென்னை மேயராக இருக்கும் பிரியா, சேகர்பாபு மூலமாக திமுக தலைமையிடம் எம் எல் ஏ சீட் கேட்டு வருகிறார். ஒருவேளை சீட் கிடைத்து விட்டால் அவர் திரு.வி.க நகர் தொகுதியில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.