2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் பிரேமலதா வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் கூட்டணியை அறிவிக்காமல் பாமக, தேமுதிக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் அந்த கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் மற்ற கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வரும் பட்சத்தில் ஜனவரி 9ம் தேதிக்கு முன்பாகவோ அல்லது அதன் பின்னரோ கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். சூழ்நிலையை பொறுத்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ள அவர் தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் எனவும் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.