கணவன்மார்களே உஷார்… வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த கணவன்… ஆத்திரத்தில் மனைவி செய்த பயங்கர சம்பவம்… இனி யாராவது இப்படி பண்ணுவீங்க…?

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு விசித்திர சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹிமானி என்ற பெண் தனது கணவர் தர்மேந்திராவின் காரை சுத்தியலால் தாக்கி நொறுக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவில், கார் பழுது பார்க்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் அனைத்து கண்ணாடிகளையும் அந்தப் பெண் உடைத்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். தன்னுடைய கணவர் வீட்டு செலவுகளுக்கு பணம் வழங்க மறுத்ததால்தான் சண்டை வெடித்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

 

   

   

இதனால் மன அழுத்தம் அடைந்த அவர் கோபத்தில் தன்னுடைய கணவரின் காரை நொறுக்கியதாக தெரிகிறது. மேலும் தானே இந்த செயலை தன்னுடைய செல்போனில் பதிவு செய்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கணவன்மார்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரின் கண்ணாடிகளை அந்த பெண் உடைத்ததால் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.