தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சில காரணங்களுக்காக பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள். கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தற்போது வரை 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணியை அரசு தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில் போடிநாயக்கனூர், சாத்தனூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உடன்பிறப்பே வா என்ற ஒன் டூ ஒன் ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் இன்று மேற்கண்டார். அப்போது விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்றுத்தர திமுகவினர் உதவ வேண்டுமென ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
