தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் கார் ரேசிங்கில் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். ராகுல் தயாரிப்பில் அஜித் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக கடந்த வாரம் வரை செய்திகள் உலா வந்தது. ஆனால் தற்போது தகவலின் படி ராகுல் தயாரிப்பில் அவர் நடிக்கப் போவதில்லை. சம்பளம் விஷயத்தில் அஜித் எப்போதும் பிடிவாதமாக இருப்பார். அப்படி இருக்கும் போது அஜித்திற்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு ராகுலிடம் பணம் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் வேறு தயாரிப்பாளரை அஜித் தரப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் தரப்பினர் மும்பையில் முகமிட்டு இருக்கிறார்களாம். இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் அஜித்தின் கார் ரேசிங் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர்களை வைத்து கூட அஜித் அடுத்த படத்தின் தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
