தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. என்னதான் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாலும் தங்கள் ஆட்சியை எப்படியாவது தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதேசமயம் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சமீபத்தில் விஜய் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிரந்தர நண்பரும் எதிரியும் இல்லை என்று கூறிய அவர், ஒரு கவுன்சிலர் கூட இல்லாத TVK, இப்படிப்பட்ட பெரிய வார்த்தைகளை பேச வேண்டுமா என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
