தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. என்னதான் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாலும் தங்கள் ஆட்சியை எப்படியாவது தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதேசமயம் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஈரோட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பாஜக இளைஞரணி தலைவர் S.G. சூர்யா தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாற்றுக் கட்சியினரை பாஜகவிற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. இந்த இணைப்பு நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சஞ்சீவ் அவர்களுக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார். 100க்கும் மேற்பட்டோர் கூண்டோடு பாஜகவில் இணைந்தது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
