தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு… முக்கிய தொகுதியில் கை வைத்த ஸ்டாலின்… நிர்வாகிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த முறையும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. என்னதான் தனது கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய தொகுதிகளில் பொறுப்பாளர்களை நியமித்து அந்த தொகுதியில் எப்படி வெற்றி பெறுவது என்பது தொடர்பாக முதல்வர் தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் ஓபிஎஸ் வசம் உள்ள போடி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென்று நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் திமுக அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதிகளை ஆராய்ந்து அங்கு திமுகவை வெற்றி பெற செய்ய நிர்வாகிகளுக்கு முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.