பாமகவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இன்னும் இவர்கள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தற்போது மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என இருவரும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பாமக நிறுவனர் ராமதாஸை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
2024 வரை A ஃபார்ம், B ஃபார்ம் ஆகியவற்றில் ராமதாஸ் தான் கையொப்பமிட்டதாக தவறான தகவலை சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. ஜி.கே.மணியும், அருளும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் போதும், பிரச்னைகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
