காலையிலேயே சோகம்..! 200 மீட்டர் ஆழம் பள்ளத்தில் உருண்டு விழுந்த பேருந்து… 37 பேர் துடிதுடித்து பலி..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

பெரு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள், உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் மொத்தம் 60 பேர் இருந்துள்ளார்கள். வளைவுகளில் திரும்பும்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்றின் மீது பேருந்து மோதியதில் 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே 37 பேர் பலியாகியுள்ளார்கள்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளில் இருந்த 34 சடலங்களையும் மீட்டுள்ளார்கள்.  படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்னிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.