தமிழக சட்டப்பேரவையில் 2024- 26 ஆம் வருடத்திற்கான பொது கணக்கு குழு தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு நேற்று முன்தினம் சென்றது. இந்த குழுவோடு தமிழக சட்டசபை இணைச்செயலாளர் ரமேஷ்(57) என்பவரும் சென்றுள்ளார். அப்போது இவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
