விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இந்த வாரம் நிகழ்ச்சியில் திருமணத்திற்கு காத்திருக்கும் நாத்தனார் மற்றும் அண்ணி என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. தன்னுடைய அண்ணி வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம் குறித்தும் அவர்கள் சில தருணங்களில் பேசும் பேச்சு குறித்தும் அரங்கத்தில் கூறி கண்கலங்கியுள்ளார்.
ஆனால் சிலர் தோழிகள் போலவும் அக்கா தங்கை போலவும் மகிழ்ச்சியாக இருந்து வருவதாக கூறியுள்ளன. இவர்களின் வாதத்தை கேட்ட கோபிநாத் இரண்டு பக்கமும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லாமல் ஒரு வாதத்தை வைத்துள்ளார். தற்போது அது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
