ஆண்களுக்கும் மாதவிடாய்…. சர்ச்சையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த சிக்கந்தர் திரைப்படம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைப் போலவே ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல், அல்லு அர்ஜுன் உடன் இணைந்த புஷ்பா 2, விக்கி கவுசல் உடன் இணைந்து சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சாவா உள்ளிட்ட திரைப்படங்களில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகின்றார். சினிமாவில் காலூன்ற பல ஆண்டுகள் ஆனாலும் தற்போது தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

சமீபத்தில் ஆண்களுக்கும் மாதவிடாய் இருக்க வேண்டும் என்று ரஷ்மிகா கூறியிருந்தார்.  இந்நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக  தெரிவித்துள்ளார். ஆண்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட்டால், அந்த நேரத்தில் , Trauma, Feelings-அவர்களால் உணர முடியும் என்று தான் கூறியதாகவும்  விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு உள்ளிட்ட பல வலிகள் இருப்பதாக இணையவாசிகள் டிரோல் செய்தனர்.