மேற்குவங்க மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துள்ளது. அப்போது வீட்டிலிருந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. அதேசமயம் வீட்டில் இருந்த ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கேஸ் சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திடீரென கேட்ட இந்த சத்தத்தால் அருகில் இருந்தவர்கள் அனைவரும் சற்று நேரத்தில் உச்சகட்ட பதற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
