சென்னை மக்களுக்கு குட் நியூஸ்… ஒரு ரூபாய்க்கு டிக்கெட்… பயணிகளுக்கு சிறப்பு சலுகை…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

சென்னை ஒன் செயலியில் நவம்பர் 13 இன்று முதல் சிறப்பு சலுகை விலையான ஒரு ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் பேருந்து, மெட்ரோ மற்றும் ரயிலில் ஒருமுறை ஒரு ரூபாய்க்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. BHIM payment App அல்லது UPI மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்படும் என சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..