தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகப்பாக வழங்கப்படுவதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருள்களின் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது அரசின் தொகுப்புடன் பொங்கல் பானைகளையும் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான சாத்தியக்கூறு மற்றும் நிதிநிலைமை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
