மது பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததற்காக ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மாதவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களுக்கு சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் மாதவரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மார்ச் மாதம் 240 ரூபாய் மதிப்புள்ள மதுபானம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பாட்டிலில் நிர்ணயிக்கப்பட்ட வலையை விட கூடுதலாக பத்து ரூபாய் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் வசூலித்துள்ளார்கள்.
இது தொடர்பாக கடை விற்பனையாளர்கள் முறையிட்டபோது எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தகாத வார்த்தையால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் அரசு நிர்ணயத்தை விலையை விட கூடுதலாக வசூலிக்கப்பட்ட பத்து ரூபாயை திரும்ப வழங்க உத்தரவிட கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேவராஜன் சென்னை நுகர்வோர் மன்றத்தில் புகார் அளித்திருந்தார் .இந்த புகாரை விசாரித்த சென்னை தீர்ப்பாயம் மாதவரம் ரவுண்டானா டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீட்டை வாடிக்கையாளர் தேவராஜனுக்கு இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
