ஆளுக்கொரு பொண்டாட்டி சர்ச்சை…. சி.வி.சண்முகம் மீது பாயப்போகும் நடவடிக்கை…? அதிர்ச்சியில் அதிமுக…!!

By Soundarya on கார்த்திகை 12, 2025

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் தேர்தலுக்கு முன் அரசு இலவசமாக மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு போன்ற பொருட்களை அறிவிக்கும் திமுக அரசு ஆளுக்கு ஒரு பொண்டாட்டியும் இலவசமாக வழங்குவார்கள் என்று பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு,  அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதன் விசாரணை தொடர்பாக கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.