மேற்கு வங்காள பள்ளி பணியமர்த்தல் ஆணையம் (WBSSC) வெள்ளிக்கிழமை இரவு 11, 12 வகுப்புகளுக்கான உதவி ஆசிரியர் பணிகளுக்கான மாநில அளவில் தேர்வு (SLST) முடிவுகளை வெளியிட்டது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 12,514 பணியிடங்கள் நிரப்பப்பட உளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பெரிய தேர்வு இதுவாகும்.
பழைய இணையதளத்தில் தொடர்ச்சியான கோளாறுகள், விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் உள்நுழைவு முயற்சி காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டதால் WBSSC சனிக்கிழமை புதிய இணையதளத்தை தொடங்கியது. wbsschelpdesk.com என்ற இந்த தளம் 2.29 லட்சம் தேர்வர்கள் முடிவுகளை எளிதாகப் பார்க்க உதவும் என அதிகாரிகள் கூறினர். “பழைய தளமும் செயல்படுகிறது. இடைவெளிகளில் முயற்சி செய்யுங்கள்” என அறிவுறுத்தினர்.
தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நேர்காணலுக்கு செல்வார்கள். அது கற்பித்தல் திறன், பாட அறிவு, தொடர்பு திறனை மதிப்பிடும். இரு நிலைகளின் மதிப்பெண்களால் இறுதி பட்டியல் தயாராகும். ஆவண சரிபார்ப்புக்குப் பின் நியமனங்கள் உறுதி செய்யப்படும்.
ஏப்ரல் 3 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு 25,753 ஆசிரியர்கள் பணி இழந்தனர். எத்தனை பேர் புதிய தேர்வில் தேர்ச்சி பெற்றனர் என உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கறை இல்லாத பலர் வெற்றி பெற்றிருப்பார்கள் என அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
