யாருப்பா இந்த வீடு கட்டுன என்ஜினீயர்?.. வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்… காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

நொய்டாவில் 1.5 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் மர பென்சிலால் சுத்தியால் அடித்த போது எளிதில் ஓட்டை விழுவதை காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள விலை உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானம் தரம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ள பயனர் தனது பிரீமியம் பிளாட்டில் டிரில்லுக்கு பதிலாக பென்சிலை பயன்படுத்தி சுவரில் ஓட்டை போட முடிந்தது என்றும் இது கட்டுமானத்தின் பலவீனத்தை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தாலும் சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்த சுவர்கள் AAC பிளாக்குகள் என்றும் இவை இலகுவானவை, சுமையை தாங்காதவை என்றும் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பை கருதி உயர் கட்டிடங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.