கல்னேவ பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், பெண் ஒருவரின் முகத்தில் ரசாயனப் பவுடர் தெளித்ததால் அவரது பார்வை பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கொள்ளையன் பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் அநுராதபுரம் மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். ஆனால் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கல்னேவ, தம்புத்தேகம, இபலோகம உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இதே நபர் பல வீடுகள், கடைகளில் திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இரவு-பகல் என சுற்றித் திரிந்த அவரது நடவடிக்கைகள் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
